இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

659ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، وَأَبُو الرَّبِيعِ، كِلاَهُمَا عَنْ عَبْدِ الْوَارِثِ، قَالَ شَيْبَانُ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَحْسَنَ النَّاسِ خُلُقًا فَرُبَّمَا تَحْضُرُ الصَّلاَةُ وَهْوَ فِي بَيْتِنَا فَيَأْمُرُ بِالْبِسَاطِ الَّذِي تَحْتَهُ فَيُكْنَسُ ثُمَّ يُنْضَحُ ثُمَّ يَؤُمُّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَنَقُومُ خَلْفَهُ فَيُصَلِّي بِنَا وَكَانَ بِسَاطُهُمْ مِنْ جَرِيدِ النَّخْلِ ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களில் மிகச் சிறந்த நற்குணம் உடையவர்களாக இருந்தார்கள். சில சமயங்களில், அவர்கள் எங்கள் வீட்டில் இருக்கும்போது தொழுகை நேரம் வந்துவிடும். அப்போது அவர்கள் தங்களுக்குக் கீழே இருக்கும் பாயை (சுத்தம் செய்யக்) கட்டளையிடுவார்கள். உடனே அது கூட்டப்பட்டு, பின்னர் அதன் மீது தண்ணீர் தெளிக்கப்படும். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகை) முன்னின்று நடத்தினார்கள்; நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்றோம். அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். அந்தப் பாய் பேரீச்சை ஓலையால் செய்யப்பட்டதாக இருந்தது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح