ஸுஹ்ரி அவர்களின் வாயிலாக இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும், உகைல் அவர்களின் வாயிலாக அறிவிக்கப்பட்ட ஹதீஸில் சொற்கள் பின்வருமாறு உள்ளன:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்ததைக் கேட்டதிலிருந்து நான் (அல்லாஹ்வைத் தவிர வேறு யார் மீதும்) சத்தியம் செய்யவில்லை, அத்தகைய சொற்களை நான் பேசவுமில்லை, மேலும் அறிவிப்பாளர், "என் சார்பாகவோ அல்லது வேறு யாருடைய சார்பாகவோ" என்று கூறவில்லை."
وَحَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، حَدَّثَنِي عُقَيْلُ بْنُ،
خَالِدٍ ح وَحَدَّثَنِيهِ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، كِلاَهُمَا
عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ . مِثْلَهُ . وَفِي حَدِيثِ عُقَيْلٍ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم
. وَلَمْ يَقُلْ سَمِعْتُ . وَفِي حَدِيثِ شُعَيْبٍ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم كَمَا قَالَ
مَعْمَرٌ .
மேற்கண்ட ஹதீஸ் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து இதே அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உகைல் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து' என்று உள்ளது; 'நான் செவியுற்றேன்' என்று அவர் கூறவில்லை. ஷுஐப் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் மஅமர் (ரஹ்) கூறியதைப் போன்றே 'நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்' என்று உள்ளது.
அனஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அறிவிக்கின்றார்கள். ஆனால் ஷுஐப் அவர்கள் ஸுஹ்ரீ அவர்கள் வாயிலாக அறிவிக்கும்போது, ''அப்துல்லாஹ் பின் ஹுதாஃபாவின் தாயார், யூனுஸ் அறிவித்த ஹதீஸைப் போன்றே கூறினார்கள் என அறிஞர்களில் ஒருவர் தமக்கு அறிவித்ததாக உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் கூறினார்'' என்று இடம்பெற்றுள்ளது.