இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து நாஃபிஉ (ரஹ்) அவர்கள் வழியாக வரும் இந்த ஹதீஸ், மாலிக் (ரஹ்) அவர்களின் ஹதீஸைப் போன்றே உள்ளது. ஆயினும், லைஸ் பின் ஸஅத் (ரஹ்) அவர்களைத் தவிர மற்ற அனைவரின் அறிவிப்பிலும் 'யுந்ததல' (கொட்டப்பட வேண்டும்) என்று இடம்பெற்றுள்ளது. லைஸ் பின் ஸஅத் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் மாலிக் (ரஹ்) அவர்களின் அறிவிப்பைப் போன்றே 'யுந்தகல தஆமுஹு' (அவரது உணவுப் பொருள் வேறிடத்திற்கு மாற்றப்பட வேண்டும்) என்று இடம்பெற்றுள்ளது.