ஹிஷாம் இப்னு உர்வா தனது தந்தை கூறியதாக அறிவித்தார்கள்:
''ஆயிஷா (ரழி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: 'உர்வாவே, உன்னுடைய இரு தந்தையரும், காயம்பட்ட பின்னரும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதர் (முஹம்மது (ஸல்)) அவர்களுக்கும் பதிலளித்தவர்களில் உள்ளவர்கள்; (அவர்கள்) அபூபக்ர் (ரழி) அவர்களும் ஸுபைர் (ரழி) அவர்களும் ஆவார்கள்.''