حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، قَالَ قُلْتُ لِعَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما ـ بَشَّرَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَدِيجَةَ قَالَ نَعَمْ بِبَيْتٍ مِنْ قَصَبٍ، لاَ صَخَبَ فِيهِ وَلاَ نَصَبَ.
இஸ்மாயீல் அறிவித்தார்கள்:
நான் அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரழி) அவர்களிடம், "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கதீஜா (ரழி) அவர்களுக்கு நற்செய்தி கூறினார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம், (சொர்க்கத்தில்) கஸபினால் ஆன ஒரு மாளிகை (அவர்களுக்கு உண்டு); அங்கு எந்த இரைச்சலோ சோர்வோ இருக்காது" என்று கூறினார்கள்.
عن أبي إبراهيم- ويقال أبو محمد، ويقال أبو معاوية- عبد الله بن أبي أوفى رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم بشر خديجة، رضي الله عنها، ببيت في الجنة من قصب ، لا صخب فيه ولا نصب. ((متفق عليه)) .
அப்துல்லாஹ் பின் அபூ அவ்ஃபா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஜன்னத்தில், ஆரவாரமோ சிரமமோ இல்லாத, குடைவான முத்துக்களால் ஆன ஒரு மாளிகையைப் பற்றி கதீஜா (ரழி) அவர்களுக்கு நற்செய்தி கூறினார்கள்.