இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3816ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ كَتَبَ إِلَىَّ هِشَامٌ عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَا غِرْتُ عَلَى امْرَأَةٍ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم مَا غِرْتُ عَلَى خَدِيجَةَ، هَلَكَتْ قَبْلَ أَنْ يَتَزَوَّجَنِي، لِمَا كُنْتُ أَسْمَعُهُ يَذْكُرُهَا، وَأَمَرَهُ اللَّهُ أَنْ يُبَشِّرَهَا بِبَيْتٍ مِنْ قَصَبٍ، وَإِنْ كَانَ لَيَذْبَحُ الشَّاةَ فَيُهْدِي فِي خَلاَئِلِهَا مِنْهَا مَا يَسَعُهُنَّ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:

கதீஜா (ரழி) அவர்கள் மீது நான் பொறாமைப்பட்டது போல், நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் வேறு எவர் மீதும் நான் பொறாமைப்பட்டதில்லை. நபி (ஸல்) அவர்கள் என்னை மணமுடிக்கும் முன்பே அவர்கள் இறந்துவிட்டார்கள். (ஆயினும்) நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரழி) அவர்களைப் பற்றி (அடிக்கடி) நினைவு கூர்வதை நான் செவியுற்றதே இதற்குக் காரணமாகும். மேலும் அல்லாஹ், கதீஜா (ரழி) அவர்களுக்கு சொர்க்கத்தில் 'கஸப்' (எனும் முத்தினாலான) மாளிகை ஒன்று உண்டு என்ற நற்செய்தியை அறிவிக்குமாறு நபி (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான். மேலும், நபி (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டை அறுத்தபோதெல்லாம், அதிலிருந்து கதீஜா (ரழி) அவர்களின் தோழிகளுக்குப் போதுமான அளவு அனுப்பி வைப்பார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
6004ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَا غِرْتُ عَلَى امْرَأَةٍ مَا غِرْتُ عَلَى خَدِيجَةَ، وَلَقَدْ هَلَكَتْ قَبْلَ أَنْ يَتَزَوَّجَنِي بِثَلاَثِ سِنِينَ، لِمَا كُنْتُ أَسْمَعُهُ يَذْكُرُهَا، وَلَقَدْ أَمَرَهُ رَبُّهُ أَنْ يُبَشِّرَهَا بِبَيْتٍ فِي الْجَنَّةِ مِنْ قَصَبٍ، وَإِنْ كَانَ لَيَذْبَحُ الشَّاةَ ثُمَّ يُهْدِي فِي خُلَّتِهَا مِنْهَا‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
கதீஜா (ரழி) அவர்களைப் பற்றி நான் பொறாமைப்பட்டது போல் வேறு எந்தப் பெண்ணைப் பற்றியும் நான் பொறாமைப்பட்டதில்லை, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை மணமுடிப்பற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் இறந்துவிட்டிருந்த போதிலும். அதற்குக் காரணம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடிக்கடி கதீஜா (ரழி) அவர்களைப் பற்றிக் குறிப்பிடுவதை நான் கேட்டிருந்ததனாலும், மேலும் கதீஜா (ரழி) அவர்களுக்கு சொர்க்கத்தில் கஸபினால் ஆன ஒரு மாளிகை இருப்பதாக நற்செய்தி கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் கட்டளையிட்டிருந்தான் என்பதனாலும், மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டை அறுத்து அதன் இறைச்சியை கதீஜா (ரழி) அவர்களின் தோழிகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பார்கள் என்பதனாலும் ஆகும்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح