இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6130ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كُنْتُ أَلْعَبُ بِالْبَنَاتِ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَكَانَ لِي صَوَاحِبُ يَلْعَبْنَ مَعِي، فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ يَتَقَمَّعْنَ مِنْهُ، فَيُسَرِّبُهُنَّ إِلَىَّ فَيَلْعَبْنَ مَعِي‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நான் நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் பொம்மைகளுடன் விளையாடுவேன்; மேலும் என்னுடன் விளையாட எனது தோழிகளும் இருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) நுழையும்போது அவர்கள் (அவரைக் கண்டு வெட்கத்தால்) தங்களை மறைத்துக் கொள்வார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவர்களை என்னிடம் (விளையாட) அனுப்பி வைப்பார்கள்; அவர்களும் என்னுடன் விளையாடுவார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1982சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا حَفْصُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا عُمَرُ بْنُ حَبِيبٍ الْقَاضِي، قَالَ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَلْعَبُ بِالْبَنَاتِ وَأَنَا عِنْدَ، رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَكَانَ يُسَرِّبُ إِلَىَّ صَوَاحِبَاتِي يُلاَعِبْنَنِي ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது பொம்மைகளை வைத்து விளையாடுவேன். (அப்போது) என்னுடன் விளையாடுவதற்காக என்னுடைய தோழிகளை அவர்கள் (நயமாக) என்னிடம் அனுப்பி வைப்பார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
368அல்-அதப் அல்-முஃபரத்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلامٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَازِمٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ‏:‏ كُنْتُ أَلْعَبُ بِالْبَنَاتِ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم، وَكَانَ لِي صَوَاحِبُ يَلْعَبْنَ مَعِي، فَكَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ يَنْقَمِعْنَ مِنْهُ، فَيُسَرِّبُهُنَّ إِلَيَّ، فَيَلْعَبْنَ مَعِي‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள், "நான் நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் பொம்மைகளுடன் விளையாடுவேன். எனது தோழிகளும் என்னுடன் விளையாடுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உள்ளே நுழையும்போது, அவர்கள் (அவரின் கண்ணியத்தின் காரணமாக) ஒளிந்து கொள்வார்கள். அப்போது அவர் அவர்களை என்னிடம் (விளையாட்டைத் தொடரச் சொல்லி) அனுப்பி வைப்பார்கள், அவர்களும் என்னுடன் விளையாடுவார்கள்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صـحـيـح (الألباني)