அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் என் சகோதரருடன் யமனிலிருந்து (மதீனாவிற்கு) வந்தோம். நாங்கள் சிறிது காலம் தங்கியிருந்தோம். (அப்போது) இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்களும் அவர்களின் தாயாரும் நபி (ஸல்) அவர்களிடம் அடிக்கடி வந்து சென்றதாலும், மேலும் நபி (ஸல்) அவர்களுடன் அவர்கள் நெருக்கமாக இருந்ததாலும், அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றே நாங்கள் கருதினோம்.