حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ عَبْدًا، لِحَاطِبِ بْنِ أَبِي بَلْتَعَةَ جَاءَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَشْكُو حَاطِبًا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَيَدْخُلَنَّ حَاطِبٌ النَّارَ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم كَذَبْتَ لاَ يَدْخُلُهَا فَإِنَّهُ قَدْ شَهِدَ بَدْرًا وَالْحُدَيْبِيَةَ . هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
ஜாபிர் (ரழி) அவர்கள் கூறியதாவது:
ஹாதிப் பின் அபீ பல்தஆ (ரழி) அவர்களின் ஓர் அடிமை, ஹாதிப் (ரழி) அவர்களைப் பற்றிப் புகார் கூறுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அவர், "அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக ஹாதிப் நரகில் நுழைவார்!" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ கூறியது பொய்! அவர் அதில் நுழையமாட்டார். ஏனெனில், அவர் பத்ருப் போரிலும் ஹுதைபிய்யா உடன்படிக்கையிலும் கலந்துகொண்டார்" என்று கூறினார்கள்.