அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அஷ்ஜாஃ, ஃகிஃபார், முஸைனா ஆகிய கோத்திரத்தினரும், மற்றும் ஜுஹைனா கோத்திரத்தைச் சேர்ந்தவர்களும், பனூ தமீம், பனூ ஆமிர் மற்றும் அசத், ஃகதஃபான் ஆகியோரின் நட்புக் கூட்டாளிகளை விட சிறந்தவர்கள் ஆவார்கள்.