وعن عائشة قالت: قال رسول الله صلى الله عليه وسلم: الرحم معلقة بالعرش تقول: من وصلني، وصله الله، ومن قطعني، قطعه الله ((متفق عليه)).
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உறவின் பிணைப்பானது அர்ஷில் தொங்கியவாறு, 'யார் என்னுடன் நல்லுறவைப் பேணுகிறாரோ, அல்லாஹ் அவருடன் தன் தொடர்பைப் பேணுவான். ஆனால், யார் என்னுடனான உறவைத் துண்டிக்கிறாரோ, அல்லாஹ் அவருடனான தன் தொடர்பைத் துண்டித்துவிடுவான்' என்று கூறுகிறது."