இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

361ரியாதுஸ் ஸாலிஹீன்
وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم ‏:‏ أن رجلاً زار أخا له في قرية أخرى، فأرصد الله تعالى على مدرجته ملكًا، فلما أتى عليه قال‏:‏ أين تريد‏؟‏ قال‏:‏ أريد أخًا لي في هذه القرية‏.‏ قال‏:‏ هل لك عليه من نعمة تربها عليه‏؟‏ قال‏:‏ لا غير أني أحببت في الله تعالى، قال‏:‏ فإنى رسول الله إليك بأن الله قد أحبك كما أحببته فيه‏"‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒருவர் மற்றொரு ஊரிலுள்ள தனது (மார்க்க) சகோதரர் ஒருவரை சந்திப்பதற்காகப் புறப்பட்டார். அல்லாஹ் அவருடைய வழியில் ஒரு வானவரை அனுப்பினான். அந்த மனிதர் அந்த வானவரைச் சந்தித்தபோது, அந்த வானவர் அவரிடம், "நீர் எங்கு செல்ல நாடுகிறீர்?" என்று கேட்டார். அதற்கு அவர், "நான் இந்த ஊரிலுள்ள எனது சகோதரரைச் சந்திக்கச் செல்கிறேன்" என்று கூறினார். அதற்கு அந்த வானவர், “அவர் உமக்குச் செய்ய வேண்டிய கைம்மாறு ஏதும் உண்டா?” என்று கேட்டார். அதற்கு அவர், “இல்லை; கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வுக்காக நான் அவரை நேசிக்கிறேன் என்பதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை” என்றார். அதற்கு அந்த வானவர், “நீர் உம்முடைய சகோதரரை அல்லாஹ்வுக்காக நேசிப்பது போல், அல்லாஹ்வும் உம்மை நேசிக்கிறான் என்பதை உமக்கு அறிவிப்பதற்காக (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதர் நான்” என்று கூறினார்."

முஸ்லிம்.