இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2590 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي أُمَيَّةُ بْنُ بِسْطَامٍ الْعَيْشِيُّ، حَدَّثَنَا يَزِيدُ، - يَعْنِي ابْنَ زُرَيْعٍ - حَدَّثَنَا رَوْحٌ،
عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ لاَ يَسْتُرُ اللَّهُ
عَلَى عَبْدٍ فِي الدُّنْيَا إِلاَّ سَتَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இவ்வுலகில் அல்லாஹ் எந்த அடியாருடைய குற்றத்தை மறைக்கிறானோ, அந்த அடியாருடைய குற்றங்களை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைப்பான்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
240ரியாதுஸ் ஸாலிஹீன்
وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال‏:‏ ‏ ‏لا يستر عبد عبدًا في الدنيا إلا ستره الله يوم القيامة‏ ‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "இவ்வுலகில் யார் பிறரின் குறைகளை மறைக்கிறாரோ, அவருடைய குறைகளை அல்லாஹ் மறுமை நாளில் மறைப்பான்".

முஸ்லிம்.