இவர்கள் அனைவரும் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து இந்த அறிவிப்பாளர் தொடர் வழியாகவே அறிவிக்கின்றனர். இது யூனுஸ் (ரஹ்) அவர்களின் ஹதீஸ் கருத்தையே கொண்டுள்ளது. எனினும், மாலிக் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் 'சகுனம்' (அத்-தியரா) பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது; 'குறிசொல்பவர்கள்' (அல்-குஹ்ஹான்) பற்றி அதில் குறிப்பிடப்படவில்லை.