அபூஹுரைரா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:
"அல்லாஹ்வுக்குத் தொண்ணூற்றொன்பது திருநாமங்கள் உள்ளன. அவற்றை மனனம் செய்தவர் (மட்டுமல்லாது, அவற்றின் பொருளை உணர்ந்து, அதன்படி செயல்பட்டவர்) சொர்க்கத்தில் நுழைவார். நிச்சயமாக அல்லாஹ் ஒற்றையானவன்; அவன் ஒற்றைப்படையை விரும்புகிறான்."
இப்னு அபீ உமர் அவர்களது அறிவிப்பில், "அவற்றைக் கணக்கிட்டவர் (அதாவது, அவற்றின் பொருளை உணர்ந்து, அதன்படி செயல்பட்டவர்)" (என்று இடம்பெற்றுள்ளது).