இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

7383ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ ‏ ‏ أَعُوذُ بِعِزَّتِكَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ، الَّذِي لاَ يَمُوتُ وَالْجِنُّ وَالإِنْسُ يَمُوتُونَ ‏ ‏‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்:
'நான் உனது கண்ணியத்தைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகிறேன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ மரணிக்காதவன்; ஜின்களும் மனிதர்களும் மரணிக்கின்றனர்.'
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
75ரியாதுஸ் ஸாலிஹீன்
الثاني‏:‏ عن ابن عباس رضي الله عنهما أيضاً أن رسول الله صلى الله عليه وسلم كان يقول‏:‏ ‏ ‏اللهم لك أسلمت وبك آمنت، وعليك توكلت، وإليك أنبت ، وبك خاصمت‏.‏ اللهم أعوذ بعزتك، لا إله إلا أنت أن تضلني، أنت الحي الذي لا تموت، والجن والإنس يموتون‏ ‏ ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)‏ ‏.‏ ‏(‏‏(‏وهذا لفظ مسلم، واختصره البخاري‏)‏‏)‏‏.‏
இப்னு அப்பாஸ் (ரளியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்திப்பவர்களாய் இருந்தார்கள்:

"அல்லாஹும்ம லக அஸ்லம்லு, வபிக ஆமன்து, வ அலைக்க தவக்கல்து, வ இலைக்க அனப்து, வபிக காஸம்து. அல்லாஹும்ம அஊது பிஇஸ்ஸதிக, லா இலாஹ இல்லா அன்த்த, அன் துளில்லனீ. அன்த்தல் ஹய்யுல்லதீ லா தமூது, வல்ஜின்னு வல்இன்ஸு யமூதூன்."

பொருள்: "யா அல்லாஹ்! உனக்கே நான் அடிபணிந்தேன்; உன்னையே நான் ஈமான் கொண்டேன்; உன் மீதே நான் நம்பிக்கை வைத்தேன்; உன் பக்கமே நான் திரும்பினேன்; உனது உதவியைக் கொண்டே நான் (சத்தியத்திற்காக) வழக்காடினேன். யா அல்லாஹ்! உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ என்னை வழிதவறச் செய்துவிடாதபடி, உனது வல்லமையைக் கொண்டு நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீயே ஒருபோதும் மரணிக்காத உயிருள்ளவன்; ஆனால், ஜின்களும் மனிதர்களும் இறந்துவிடுவார்கள்."

(புகாரி மற்றும் முஸ்லிம்).