அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ் நூறு கருணைகளைப் படைத்தான். அவற்றில் ஒரு கருணையைத் தன் படைப்புகளுக்கு மத்தியில் வைத்தான். அதன் மூலம் அவை ஒன்றுக்கொன்று கருணை காட்டுகின்றன. மேலும் தொண்ணூற்று ஒன்பது கருணைகள் அல்லாஹ்விடம் இருக்கின்றன.”