அபூ சயீத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“வானங்களையும் பூமியையும் படைத்த நாளில், அல்லாஹ் நூறு (பாகம்) கருணையைப் படைத்தான். அவற்றில் ஒன்றை அவன் பூமியில் வைத்தான். அதன் மூலமாகவே தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளிடம் கருணை காட்டுகிறார்கள், மேலும் மிருகங்களும் பறவைகளும் ஒன்றுக்கொன்று கருணை காட்டுகின்றன. மேலும் அவன் தொண்ணூற்று ஒன்பது (பாகம்) கருணையைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். மறுமை நாள் வரும்போது, அல்லாஹ் இந்தக் கருணையை (நூறாக)ப் பூரணப்படுத்துவான்.”