இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2760 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ،
عُثْمَانُ حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى
الله عليه وسلم ‏ ‏ لَيْسَ أَحَدٌ أَحَبَّ إِلَيْهِ الْمَدْحُ مِنَ اللَّهِ مِنْ أَجْلِ ذَلِكَ مَدَحَ نَفْسَهُ وَلَيْسَ أَحَدٌ
أَغْيَرَ مِنَ اللَّهِ مِنْ أَجْلِ ذَلِكَ حَرَّمَ الْفَوَاحِشَ ‏ ‏ ‏.‏
புகழை அல்லாஹ்வை விட அதிகம் விரும்புபவர் எவருமில்லை; இதனால்தான் அவன் தன்னைப் புகழ்ந்து கொண்டான். அல்லாஹ்வை விட அதிக ரோஷம் (தன் கட்டளைகள் மீறப்படுவதில் கோபம்) கொண்டவர் எவருமில்லை; இதனால்தான் அருவருக்கத்தக்க செயல்களை (விபச்சாரம், ஓரினச்சேர்க்கை போன்ற பாவங்களை) அவன் தடை செய்துள்ளான்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح