ஸஹ்ல் பின் ஸஅத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் நபி (ஸல்) அவர்கள், “மக்கள் மறுமை நாளில், தூய (மற்றும் மென்மையான) மாவினாலான ரொட்டியைப் போன்று (மிக வெண்மையாகவும், சமதளமாகவும், எந்தக் குறையுமில்லாமலும் இருக்கும்), செம்மையும் வெண்மையும் கலந்த ஒரு பூமியில் ஒன்று திரட்டப்படுவார்கள்” என்று கூறுவதை கேட்டேன்.
ஸஹ்ல் அல்லது வேறொருவர் கூறினார்கள்: “அதில் எவருக்கும் எந்த அடையாளமும் இருக்காது (எந்த மலைகளோ, கட்டிடங்களோ, மரங்களோ, அடையாளச் சின்னங்களோ இல்லாத சமதளமாக இருக்கும்).”