حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ خَالِدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " تَكُونُ الأَرْضُ يَوْمَ الْقِيَامَةِ خُبْزَةً وَاحِدَةً، يَتَكَفَّؤُهَا الْجَبَّارُ بِيَدِهِ، كَمَا يَكْفَأُ أَحَدُكُمْ خُبْزَتَهُ فِي السَّفَرِ، نُزُلاً لأَهْلِ الْجَنَّةِ ". فَأَتَى رَجُلٌ مِنَ الْيَهُودِ فَقَالَ بَارَكَ الرَّحْمَنُ عَلَيْكَ يَا أَبَا الْقَاسِمِ، أَلاَ أُخْبِرُكَ بِنُزُلِ أَهْلِ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ قَالَ " بَلَى ". قَالَ تَكُونُ الأَرْضُ خُبْزَةً وَاحِدَةً كَمَا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَنَظَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَيْنَا، ثُمَّ ضَحِكَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ ثُمَّ قَالَ أَلاَ أُخْبِرُكَ بِإِدَامِهِمْ قَالَ إِدَامُهُمْ بَالاَمٌ وَنُونٌ. قَالُوا وَمَا هَذَا قَالَ ثَوْرٌ وَنُونٌ يَأْكُلُ مِنْ زَائِدَةِ كَبِدِهِمَا سَبْعُونَ أَلْفًا.
அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மறுமை நாளில் பூமி ஒரேயொரு ரொட்டியாக இருக்கும். உங்களில் ஒருவர் பயணத்தில் (ரொட்டி சுடுவதற்காக) தமது ரொட்டியைப் புரட்டுவதைப் போன்று, சர்வத்தையும் அடக்கி ஆளும் (அல்லாஹ்) அதைத் தனது கரத்தால் புரட்டுவான். அது சொர்க்கவாசிகளுக்குரிய விருந்தாக இருக்கும்."
(பிறகு) யூதர்களில் ஒருவர் வந்து, "அபுல் காஸிமே! அருளாளன் (அல்லாஹ்) உங்களுக்கு அருள் புரிவானாக! மறுமை நாளில் சொர்க்கவாசிகளின் விருந்தைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்லட்டுமா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் "ஆம்" என்றார்கள். அந்த யூதர், "பூமி ஒரேயொரு ரொட்டியாக இருக்கும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருந்ததைப் போலவே கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களைப் பார்த்து, அவர்களின் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவிற்குச் சிரித்தார்கள்.
பிறகு அந்த யூதர், "அவர்களுக்கான தொடுகறி (இதாஃம்) பற்றி நான் உங்களுக்குச் சொல்லட்டுமா?" என்று கேட்டார். (தொடர்ந்து), "அவர்களுடைய தொடுகறி 'பாலாம்' மற்றும் 'நூன்' ஆகும்" என்றார். மக்கள், "அவை என்ன?" என்று கேட்டார்கள். அவர், "அவை ஒரு காளை மாடும் ஒரு மீனும் ஆகும். அவற்றின் ஈரல்களின் வால் மடலிலிருந்து (சுவையான பகுதியிலிருந்து) எழுபதாயிரம் பேர் உண்பார்கள்" என்று கூறினார்.