அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கண்ணியத்திற்குரியவனும் மேலானவனுமாகிய அல்லாஹ், (மறுமை நாளில்) நரகவாசிகளிலேயே மிகக் குறைந்த வேதனை பெறுபவரிடம், "உலகமும் அதிலுள்ளவையும் உனக்குரியதாக இருந்தால், (வேதனையிலிருந்து தப்பிக்க) அவற்றை நீ ஈடாகக் கொடுப்பாயா?" என்று கேட்பான். அதற்கு அவன் "ஆம்" என்பான். அப்பொழுது அல்லாஹ், "நீ ஆதமின் முதுகந்தண்டில் இருந்தபோதே இதைவிட மிக எளிதான ஒன்றை உன்னிடம் நான் விரும்பினேன். அதாவது, நீ எனக்கு எதனையும் இணையாக்கக் கூடாது - (அறிவிப்பாளர் கூறுகிறார்: 'உன்னை நான் நரகத்தில் புகுத்த மாட்டேன்' என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நான் கருதுகிறேன்) - ஆனால், நீயோ இணைவைப்பதைத் தவிர (வேறெதனையும் ஏற்க) மறுத்துவிட்டாய்" என்று கூறுவான்.