حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَابْنُ أَبِي عُمَرَ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ
ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ صَحِبْتُ ابْنَ عُمَرَ إِلَى الْمَدِينَةِ فَمَا سَمِعْتُهُ يُحَدِّثُ، عَنْ رَسُولِ
اللَّهِ صلى الله عليه وسلم إِلاَّ حَدِيثًا وَاحِدًا قَالَ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأُتِيَ
بِجُمَّارٍ . فَذَكَرَ بِنَحْوِ حَدِيثِهِمَا .
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் மதீனா வரை சென்றேன். ஆனால் (அந்தப் பயணத்தின்போது) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரேயொரு ஹதீஸைத் தவிர வேறு எதையும் அறிவித்ததை நான் கேட்டதில்லை. அவர்கள் கூறினார்கள்: "நாங்கள் நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் இருந்தபோது, அவர்களிடம் பேரீச்ச மரத்தின் குருத்து (ஜும்மார்) கொண்டுவரப்பட்டது." பிறகு (முந்தைய) அவ்விருவரின் ஹதீஸில் உள்ளதைப் போன்றே இவரும் குறிப்பிட்டார்.