நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நேர்மையைக் கடைப்பிடியுங்கள்; (பூரணத்துவத்தை) நெருங்கி நில்லுங்கள்; நற்செய்தி பெறுங்கள்! ஏனெனில், நிச்சயமாக ஒருவரின் செயல் அவரைச் சொர்க்கத்தில் நுழைவிப்பதில்லை."
(தோழர்கள்) "அல்லாஹ்வின் தூதரே! உங்களையுமா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், "என்னையும்தான்; அல்லாஹ் தனது மன்னிப்பாலும் அருளாலும் என்னை அரவணைத்துக் கொண்டாலன்றி!" என்று கூறினார்கள்.