وعن أنس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إن في الجنة سوقاً يأتونها كل جمعة. فتهب ريح الشمال، فتحثوا في وجوههم وثيابهم، فيزدادون حسناً وجمالاً فيرجعون إلى أهليهم، وقد ازدادوا حسناً وجمالاً، فيقول لهم أهلوهم: والله لقد ازددتم حسناً وجمالاً! فيقولون: وأنتم والله لقد ازددتم بعدنا حسناً وجمالاً! ((رواه مسلم)).
அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஜன்னாவில் ஒரு சந்தை உள்ளது. அங்கு மக்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வருவார்கள். அப்போது வடகாற்று வீசி, அவர்களுடைய முகங்களிலும் ஆடைகளிலும் நறுமணத்தைப் பொழியும். அதன் விளைவாக, அவர்களுடைய அழகும் பொலிவும் மேலும் அதிகரிக்கும். பின்னர் அவர்கள் தங்கள் மனைவியரிடம் திரும்பிச் செல்வார்கள். அதற்குள் அவர்களின் மனைவியரின் அழகும் பொலிவும் கூட அதிகரித்திருக்கும். அவர்களுடைய குடும்பத்தினர் அவர்களிடம், 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எங்களை விட்டுப் பிரிந்து சென்றதிலிருந்து உங்களுடைய அழகும் பொலிவும் அதிகரித்துவிட்டது' என்று கூறுவார்கள். அதற்கு அவர்கள், 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் உங்களை விட்டுப் பிரிந்து சென்றதிலிருந்து உங்களுடைய அழகும் பொலிவும் கூட அதிகரித்துவிட்டது' என்று பதிலளிப்பார்கள்."