ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "சுவனவாசிகள் அங்கே உண்பார்கள், மேலும் பருகுவார்கள். ஆனால் அவர்கள் மலம் கழிக்கமாட்டார்கள், மூக்குச்சளி சிந்தமாட்டார்கள், சிறுநீர் கழிக்கமாட்டார்கள். அவர்கள் உண்ணும் உணவு, ஏப்பம் விடுவதன் மூலம் செரிமானமாகும். அவர்களின் வியர்வை முதிர்ந்த கஸ்தூரியாக இருக்கும். நீங்கள் சுவாசிப்பதைப் போன்று இயல்பாக அவர்கள் அல்லாஹ்வை தஸ்பீஹ் மற்றும் தஹ்மீத் செய்வார்கள்."