நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒருவர் அழைத்துக் கூறுவார்: 'நீங்கள் வாழ்வு பெறுவீர்கள், ஒருபோதும் மரணிக்க மாட்டீர்கள்; நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள், ஒருபோதும் நோய்வாய்ப்பட மாட்டீர்கள்; நீங்கள் இளமையாக இருப்பீர்கள், ஒருபோதும் முதுமையடைய மாட்டீர்கள்; நீங்கள் அருட்கொடையில் வாழ்வீர்கள், ஒருபோதும் கஷ்டமான சூழ்நிலைகளை அனுபவிக்க மாட்டீர்கள்.' அதுவே உயர்ந்தோனாகிய அல்லாஹ்வின் கூற்றாகும்: நீங்கள் செய்து கொண்டிருந்த உங்கள் செயல்களின் காரணமாக நீங்கள் வாரிசாக ஆக்கப்பட்ட சுவர்க்கம் இதுவாகும் (43:72)."