حَدَّثَنِي سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنِي حَفْصُ بْنُ مَيْسَرَةَ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ،
عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ رُبَّ أَشْعَثَ مَدْفُوعٍ
بِالأَبْوَابِ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ .
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அழுக்கு படிந்த, தலைவிரி கோலத்துடன் (தோற்றத்தில் எளிமையாகக் காணப்பட்டு), வாசல்களில் (மக்களால்) புறக்கணிக்கப்பட்டு விரட்டப்படும் எத்தனையோ பேர் இருக்கின்றனர்; அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (ஒரு காரியத்தை) வேண்டினால், அல்லாஹ் அதை நிச்சயம் நிறைவேற்றி வைப்பான்.”