நான் பனூ ஃபிஹ்ர் கோத்திரத்தைச் சேர்ந்த முஸ்தவ்ரித் (ரழி) அவர்கள் கூறக் கேட்டேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மறுமையோடு ஒப்பிட்டால் இவ்வுலகின் நிலையானது, உங்களில் ஒருவர் தமது விரலைக் கடலில் இடுவதைப் போன்றதேயாகும். அதிலிருந்து அது எதைக் கொண்டு திரும்புகிறது என்று அவர் பார்க்கட்டும்."
பனூ ஃபிஹ்ர் கோத்திரத்தைச் சேர்ந்த சகோதரரான முஸ்தவ்ரித் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: ‘மறுமையுடன் ஒப்பிடும்போது இவ்வுலகின் உதாரணமாவது, உங்களில் ஒருவர் தனது விரலை கடலில் முக்குவதைப் போன்றதாகும்: அதிலிருந்து அவர் எதைக் கொண்டு வருகிறார் என்று பார்க்கட்டும்.’”