இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

7407ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ ذُكِرَ الدَّجَّالُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ ‏ إِنَّ اللَّهَ لاَ يَخْفَى عَلَيْكُمْ، إِنَّ اللَّهَ لَيْسَ بِأَعْوَرَ ـ وَأَشَارَ بِيَدِهِ إِلَى عَيْنِهِ ـ وَإِنَّ الْمَسِيحَ الدَّجَّالَ أَعْوَرُ الْعَيْنِ الْيُمْنَى كَأَنَّ عَيْنَهُ عِنَبَةٌ طَافِيَةٌ ‏ ‏‏.‏
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்களிடம் தஜ்ஜால் பற்றிக் குறிப்பிடப்பட்டது. அப்போது அவர்கள், “நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு மறைவானவன் அல்லன்; நிச்சயமாக அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன்” என்று கூறிவிட்டு, தமது கையால் தமது கண்ணைச் சுட்டிக் காட்டினார்கள். (மேலும்), “நிச்சயமாக மஸீஹ் தஜ்ஜால் வலது கண் ஊனமுற்றவன் ஆவான்; அவனது கண் துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்று இருக்கும்” என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1819ரியாதுஸ் ஸாலிஹீன்
وعن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم ذكر الدجال بين ظهراني الناس فقال‏:‏ ‏ ‏ إن الله ليس بأعور، ألا إن المسيح الدجال أعور العين اليمنى، كأن عينه عنبة طافية‏ ‏ ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)‏‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு மத்தியில் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது அவர்கள், "நிச்சயமாக அல்லாஹ் ஒற்றைக்கண் உடையவன் அல்லன். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக மஸீஹ் தஜ்ஜால் வலது கண் குருடானவன் ஆவான். அவனது கண் உப்பிய திராட்சையைப் போன்று இருக்கும்" என்று கூறினார்கள்.

(புகாரி, முஸ்லிம்)