அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நிலைமை மேலும் கடுமையாகிக்கொண்டே செல்லும்; உலகம் மேலும் பின்னடைவையே சந்திக்கும்; மக்கள் மேலும் கஞ்சத்தனம் உடையவர்களாக ஆவார்கள்; மக்களில் தீயவர்கள் மீதே யுகமுடிவு நாள் ஏற்படும்; மேலும் மஹ்தி என்பவர் ஈஸா பின் மர்யம் (அலை) அவர்களைத் தவிர வேறு யாருமில்லை.”