இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4103ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها ‏{‏إِذْ جَاءُوكُمْ مِنْ فَوْقِكُمْ وَمِنْ أَسْفَلَ مِنْكُمْ وَإِذْ زَاغَتِ الأَبْصَارُ‏}‏ قَالَتْ كَانَ ذَاكَ يَوْمَ الْخَنْدَقِ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

பின்வரும் குர்ஆன் வசனத்தைப் பொருத்தவரை:-- “அவர்கள் உங்களுக்கு மேலிருந்தும் கீழிருந்தும் (பள்ளத்தாக்கின் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும்) உங்களிடம் வந்தபோது, மேலும் கண்கள் நிலைகுத்தி நின்றபோது, இதயங்கள் தொண்டைக்குழி வரை எட்டியபோது.....” (33:10) அது அல்-கந்தக் (அதாவது அகழ்) அன்று நிகழ்ந்தது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح