அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள், "சாபத்தைப் பெற்றுத்தரும் இரண்டு (செயல்களைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு (தோழர்கள்), "அல்லாஹ்வின் தூதரே! சாபத்தைப் பெற்றுத்தரும் அந்த இரண்டு (செயல்கள்) எவை?" என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், "மக்கள் செல்லும் பாதையிலோ அல்லது அவர்கள் (இளைப்பாறும்) நிழலிலோ (மலஜலம்) கழிப்பவராவார்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ஸஹீஹ் (இதன் அறிவிப்பாளர் தொடர் ஆதாரபூர்வமானது)
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சாபத்தை உண்டாக்கும் இரண்டு விஷயங்களைத் தவிர்ந்துகொள்ளுங்கள்" என்று கூறினார்கள். அதற்குத் தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! சாபத்தை உண்டாக்கும் அந்த இரண்டு விஷயங்கள் யாவை?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "மக்கள் நடக்கும் பாதையிலும், அல்லது அவர்கள் (ஓய்வெடுக்கும்) நிழலிலும் இயற்கைக்கடனை நிறைவேற்றுவது" என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضى الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم -{ اِتَّقُوا اَللَّاعِنِينَ: اَلَّذِي يَتَخَلَّى فِي طَرِيقِ اَلنَّاسِ, أَوْ فِي ظِلِّهِمْ } رَوَاهُ مُسْلِم ٌ [1] .
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “சாபத்திற்குரிய இருவரை அஞ்சுங்கள் (அதாவது, அத்தகைய செயல்களைச் செய்வதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்): மக்கள் நடமாடும் பாதையிலும், அல்லது அவர்களின் நிழலிலும் மலஜலம் கழிப்பவரை.”
وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: “اتقوا اللاعنين” قالوا: وما اللاعنان؟ قال: الذي يتخلى في طريق الناس أو في ظلهم ((رواه مسلم)).
அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சாபமிடுவதற்கு காரணமாக அமையும் இரு செயல்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நபித்தோழர்கள் (ரழி) அவர்கள், “சாபமிடுவதற்கு காரணமாக அமையும் அந்த இரு செயல்கள் யாவை?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “மக்களின் பாதையில் அல்லது அவர்களின் நிழலில் (சிறுநீர் அல்லது மலம் கழித்து) அசுத்தம் செய்வதாகும்” என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(மக்களின்) சாபத்தைப் பெற்றுத்தரும் இரண்டு (செயல்களை) விட்டும் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்" என்று கூறினார்கள்.
அதற்கு (நபித்தோழர்கள்), "அல்லாஹ்வின் தூதரே! சாபத்தைப் பெற்றுத்தரும் அந்த இரண்டு (செயல்கள்) யாவை?" என்று கேட்டனர்.
நபி (ஸல்) அவர்கள், "மக்கள் (நடமாடும்) பாதையிலும், அவர்கள் (ஒதுங்கும்) நிழலிலும் மலஜலம் கழிப்பவன் தான் (அந்தச் சாபத்திற்குரியவன்)" என்று பதிலளித்தார்கள்.
(இதனை குதைபா வழியாக முஸ்லிம் தமது ஸஹீஹில் பதிவு செய்துள்ளார்)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சாபத்தைப் பெற்றுத் தரும் இரண்டு (செயல்களை) அஞ்சிக் கொள்ளுங்கள் (தவிர்ந்து கொள்ளுங்கள்)" என்று கூறினார்கள். (அங்கிருந்தவர்கள்) "அல்லாஹ்வின் தூதரே! சாபத்தைப் பெற்றுத் தரும் அந்த இரண்டு (செயல்கள்) யாவை?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "முஸ்லிம்களின் (நடமாடும்) பாதையிலும், அவர்களது (இளைப்பாறும்) நிழலிலும் மலஜலம் கழிப்பவர் (தான் அந்தச் செயலுக்குரியவர்)" என்று பதிலளித்தார்கள்.