ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நபி (ஸல்) அவர்கள் மிஸ்வாக் செய்வார்கள். பிறகு அதைக் கழுவுவதற்காக என்னிடம் கொடுப்பார்கள். நான் முதலில் அதைக் கொண்டு மிஸ்வாக் செய்வேன் (அதாவது, நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்திய அதே மிஸ்வாக்கை நான் பயன்படுத்துவேன்); பிறகு அதைக் கழுவி அவர்களிடம் கொடுப்பேன்.”
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் மிஸ்வாக் (பல் துலக்கி) செய்துவிட்டு, அதனைக் கழுவுவதற்காக என்னிடம் கொடுப்பார்கள். அப்போது நான் முதலில் அதனைக் கொண்டு (அண்ணலாரின் உமிழ்நீர் மூலம் பரக்கத் பெறுவதற்காக) மிஸ்வாக் செய்வேன். பின்னர் அதனைக் கழுவி, அவர்களிடம் திருப்பிக் கொடுப்பேன்.