அலீ (ரழி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உளூ (முறை) குறித்துக் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் (முழுமையான) அந்த ஹதீஸைக் குறிப்பிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்:
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்)) தமது தலையை (ஈரக்கையினால்) மஸஹ் செய்தார்கள்; எந்தளவிற்கு என்றால் (அவர்களது தலையிலிருந்து) தண்ணீர் சொட்டும் அளவிற்கு (அதிகமான நீரைக் கொண்டு மஸஹ் செய்தார்கள்). மேலும், தமது இரு கால்களையும் மும்மூன்று முறை கழுவினார்கள். பிறகு, "இப்படித்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உளூ அமைந்திருந்தது" என்று கூறினார்கள்.
அலீ (ரழி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உளூ (அங்கத் தூய்மை) குறித்துக் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் (கூபா பள்ளிவாசலின்) விசாலமான முற்றத்தில் தண்ணீரை ஊற்றிவிட்டு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உளூ குறித்துக் கேட்டவர் எங்கே?" என்று கேட்டார்கள்.
பிறகு, தமது இரு (மணிக்கட்டு வரையிலான) முன்கைகளையும் மூன்று முறை கழுவினார்கள். தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். தமது இரு முன்கைகளையும் (முழங்கைகள் வரை) மூன்று முறை கழுவினார்கள். மேலும், (தண்ணீர்) சொட்டும் நிலையை நெருங்கும் அளவிற்குத் தமது தலையை மஸஹ் செய்தார்கள் (தடவினார்கள்). தமது இரு கால்களையும் மும்மூன்று முறை கழுவினார்கள். பின்னர், "இப்படித்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூச் செய்வார்கள்" என்று கூறினார்கள்.
அல்-ஃபகீஹ் அவர்களின் அறிவிப்பில், "(தண்ணீர்) சொட்டும் நிலையை நெருங்கும் அளவிற்கு" என்ற வாசகம் இடம்பெறவில்லை; மற்றவை அனைத்தும் சமமானதே (ஒரே மாதிரியானவை).