இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

أَخْبَرَنَا أَبُو عَلِيٍّ، ثنا أَبُو بَكْرٍ، ثنا أَبُو دَاوُدَ، ثنا مُؤَمَّلُ بْنُ الْفَضْلِ الْحَرَّانِيُّ، أنا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، ثنا عَبْدُ اللهِ بْنُ الْعَلَاءِ، ثنا أَبُو الْأَزْهَرِ الْمُغِيرَةُ بْنُ فَرْوَةَ، وَيَزِيدُ بْنُ أَبِي مَالِكٍ، أَنَّ مُعَاوِيَةَ " تَوَضَّأَ لِلنَّاسِ كَمَا رَأَى رَسُولَ اللهِ ﷺ يَتَوَضَّأُ، فَلَمَّا بَلَغَ رَأْسَهُ غَرَفَ غَرْفَةً مِنْ مَاءٍ فَتَلَقَّاهَا بِشِمَالِهِ حَتَّى وَضَعَهَا عَلَى وَسَطِ رَأْسِهِ حَتَّى قَطَرَ الْمَاءُ أَوْ كَادَ يَقْطُرُ، ثُمَّ مَسَحَ مِنْ مُقَدَّمِ رَأْسِهِ إِلَى مُؤَخَّرِهِ، وَمِنْ مُؤَخَّرِهِ إِلَى مُقَدَّمِهِ "
முஆவியா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூ (அங்கசுத்தி) செய்வதைத் தாம் பார்த்தவாறே, மக்களுக்கு (அதைச் செய்து) காண்பித்தார்கள். அவர்கள் தமது தலையை (மஸஹ் செய்யும் நிலையை) அடைந்தபோது, ஒரு கையளவு நீரை அள்ளி, அதனைத் தமது இடது கையில் பெற்று, தண்ணீர் சொட்டும் அளவுக்கு அல்லது (கிட்டத்தட்ட) சொட்டத் துவங்கும் அளவுக்குத் தமது தலையின் நடுப்பகுதியில் வைத்தார்கள்.

பின்னர், (தமது கைகளால்) தலையின் முன்பகுதியிலிருந்து பின்பகுதி வரையிலும், மீண்டும் பின்பகுதியிலிருந்து முன்பகுதி வரையிலும் தடவி (மஸஹ்) செய்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஹதீஸ் தரம் கிடைக்கவில்லை
لا نعرف حكم له