அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "மாதவிடாயிலிருந்து (குளித்துத்) தூய்மையடையும் போது, (மாதவிடாய் இரத்தம் படிந்த) தனது ஆடையை என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்பதை நான் செவியுற்றேன். அதற்கு அவர்கள் (ஸல்), "அதில் (உலர்ந்த) இரத்தத்தைக் கண்டால், அதைச் சுரண்டிவிட்டு, பின்னர் (தண்ணீர் ஊற்றி விரல் நுனிகளால்) நன்றாகக் கசக்குவீராக. பின்னர் (அந்த இடத்தைத் தண்ணீரால் கழுவிவிட்டு) உமது ஆடையின் ஏனைய பகுதிகளில் தண்ணீரைத் தெளிப்பீராக. பின்னர் அதில் தொழுவீராக!" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : இதன் அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹ் (அத்தாரானீ)
அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், தான் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்த பிறகு (மாதவிடாய் இரத்தம் பட்ட) தன்னுடைய ஆடையை என்ன செய்ய வேண்டும் என்று கேட்பதை நான் செவியுற்றேன். அதற்கு அவர்கள், "அதில் அவள் (உறைந்த நிலையில்) இரத்தத்தைக் கண்டால், அதனைச் சுரண்டிவிட வேண்டும். பின்னர் தண்ணீர் விட்டு (விரல் நுனிகளால்) அதைக் கசக்கிக் கழுவ வேண்டும். பிறகு ஆடையின் மற்ற பகுதிகளின் மீது தண்ணீரைத் தெளித்துவிட்டு, (அதனை அணிந்து) அவள் தொழுது கொள்ளட்டும்" என்று கூறினார்கள்.