أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الطُّفَاوِيُّ، قَالَ حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِذَا نَعَسَ أَحَدُكُمْ فِي صَلاَتِهِ فَلْيَنْصَرِفْ وَلْيَرْقُدْ .
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவருக்குத் தமது தொழுகையின் போது தூக்கக்கலக்கம் ஏற்பட்டால், அவர் (தொழுகையிலிருந்து) விலகிச் சென்று தூங்கட்டும்."
அலீ இப்னு தல்க் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரேனும் தொழுகையின் போது காற்றுப் பிரித்தால், அவர் தொழுகையிலிருந்து விலகி, உளூ செய்து, தொழுகையை மீண்டும் தொழ வேண்டும்.