حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَفَاضَ يَوْمَ النَّحْرِ ثُمَّ رَجَعَ فَصَلَّى الظُّهْرَ بِمِنًى . قَالَ نَافِعٌ فَكَانَ ابْنُ عُمَرَ يُفِيضُ يَوْمَ النَّحْرِ ثُمَّ يَرْجِعُ فَيُصَلِّي الظُّهْرَ بِمِنًى وَيَذْكُرُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم فَعَلَهُ .
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நஹ்ருடைய நாளில் (துல்ஹஜ் 10ஆம் நாள் தவாஃபுல் இஃபாதா எனும்) கஃபாவைச் சுற்றிவரும் கடமையான தவாஃபைச் செய்தார்கள். பின்னர் (மினாவிற்குத்) திரும்பி, மினாவில் லுஹர் தொழுதார்கள்.
(இப்னு உமர் (ரலி) அவர்களின் மாணவரான) நாஃபிஃ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
இப்னு உமர் (ரலி) அவர்கள் நஹ்ருடைய நாளில் (தவாஃபுல் இஃபாதா எனும்) கஃபாவைச் சுற்றிவரும் கடமையான தவாஃபைச் செய்வார்கள். பின்னர் (மினாவிற்குத்) திரும்பி, மினாவில் லுஹர் தொழுவார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் அவ்வாறே செய்தார்கள் என்று கூறுவார்கள்.