இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3160ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ، عَبْدِ اللَّهِ قَالَ كُنَّا نَتَمَتَّعُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالْعُمْرَةِ فَنَذْبَحُ الْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ نَشْتَرِكُ فِيهَا ‏.‏
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உம்ராவுடன் தமத்துஃ (ஹஜ்) செய்தோம். அப்போது நாங்கள் ஒரு பசுவை ஏழு நபர்களுக்குப் பகரமாக அறுத்து, அதில் கூட்டாகப் பங்குகொண்டோம்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح