அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களது குர்பானிப் பிராணியைத் தொழும் திடலிலேயே (ஈத்காவிலேயே) அறுத்து பலியிடுபவர்களாக இருந்தார்கள்.
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு உமர் (ரழி) அவர்களும் அவ்வாறே செய்யும் (தொழும் திடலில் அறுக்கும்) வழக்கம் உடையவர்களாக இருந்தார்கள்.
(இது அல்-ஆமிரியின் ஹதீஸ் வாசகமாகும். அபுல் அஸ்ஹரின் ஹதீஸில், நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யும் வழக்கம் உடையவர்களாக இருந்தார்கள் என்று இடம்பெற்றுள்ளது).