அப்துல்லாஹ் பின் உபைத் பின் உமைர் (ரஹ்) கூறுகிறார்:
இப்னு ஸுபைர் (ரழி) அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் என் தந்தையுடன் அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்களின் அருகில் நான் (அமர்ந்து) இருந்தேன். அப்போது அப்பாத் பின் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், "(மக்ரிப் அல்லது இஷா) தொழுகைக்கு முன்பாகவே இரவு உணவைத் தொடங்க வேண்டும் என்று நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம்" என்றார். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள், "உமக்கு நற்பேறு உண்டாகட்டும்! (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றும் அவர்களது தோழர்களாகிய) அவர்களின் இரவு உணவு என்னவாக இருந்தது (என்று உமக்குத் தெரியுமா)? அது (தற்போது வசதிகள் பெருகியுள்ள) உமது தந்தையின் இரவு உணவைப் போன்றது என்று நீர் கருதுகிறீரா?" என்று கேட்டார்கள்.