அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"முப்பதுக்கு நெருக்கமான பெரும் பொய்யர்களான தஜ்ஜால்கள் (உலகில்) தோன்றும் வரை மறுமை நாள் ஏற்படாது. அவர்களில் ஒவ்வொருவரும் தன்னை அல்லாஹ்வின் தூதர் என்று வாதிடுவார்கள்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.