حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَرَأَ فِي الْمَغْرِبِ بِالطُّورِ.
ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஃரிப் தொழுகையில் ‘அத்-தூர்’ அத்தியாயத்தை ஓதுவதைக் கேட்டேன் (அதாவது, சப்தமாக ஓதினார்கள்).”
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ بِالطُّورِ فِي الْمَغْرِبِ .
ஜுபைர் இப்னு முத்இம் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்தார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்ல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மஃரிப் தொழுகையில் அத்தூரு (அத்தியாயம் 52, அதாவது 'மலை' எனும் அத்தியாயத்தை) ஓதுவதை செவியுற்றேன்.