அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் உள்ளங்கை அவர்களுடைய இரு உள்ளங்கைகளுக்கு இடையில் இருக்க, குர்ஆனிலிருந்து ஒரு அத்தியாயத்தைக் கற்றுக்கொடுப்பதைப் போலவே எனக்கு ‘தஷஹ்ஹுத்’தையும் (தொழுகையில் ஓதப்படும் இறுதி அமர்வின் துஆவை) கற்றுக்கொடுத்தார்கள். (அது வருமாறு):
(பொருள்: சொல்லால், உடலால், பொருளால் செய்யும் வணக்கங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்கள் மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், அவனது பரக்கத்தும் உண்டாவதாக. எங்கள் மீதும், அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாவதாக. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்.)
அவர்கள் எங்கள் இடையே (உயிருடன்) இருந்தவரை (இந்த தஷஹ்ஹுத் துஆவை) கூறிவந்தோம். அவர்கள் இறந்த பிறகு, நாங்கள் “அஸ்ஸலாம்” (அதாவது: நபியின் மீது சாந்தி உண்டாவதாக) என்று கூறலானோம்.