`அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உங்களில் எவரேனும் தொழும்போது தூக்கக் கலக்கம் அடைந்தால், அவர் தம் தூக்கம் நீங்கும் வரை படுக்கைக்குச் சென்று (தூங்கட்டும்). ஏனெனில், தூக்கக் கலக்கத்துடன் தொழுதால், ஒருவர் தமக்காக மன்னிப்புக் கேட்கிறாரா அல்லது தமக்கு எதிராகக் கெடுதலைக் கேட்கிறாரா என்று அவருக்குத் தெரியாது."`
ஆயிஷா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
உங்களில் எவரேனும் தொழுகையில் தூக்கம் மேலிட்டால், தூக்கம் அவரைவிட்டு நீங்கும்வரை அவர் உறங்கட்டும். ஏனெனில், உங்களில் ஒருவர் தூக்கக் கலக்கத்துடன் தொழும்போது, அவர் (அல்லாஹ்விடம்) மன்னிப்புக் கோருகிறாரோ அல்லது தம்மைத்தாமே சபித்துக்கொள்கிறாரோ என்பதை அவர் அறியமாட்டார்.