ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் பதினொரு ரக்அத்கள் தொழுவார்கள்; அவற்றில் ஒரு ரக்அத்தைக் கொண்டு வித்ர் தொழுவார்கள். அவற்றை முடித்ததும், முஅத்தின் அவர்களிடம் வரும் வரை தங்கள் வலது பக்கத்தில் படுத்துக் கொள்வார்கள். பின்னர் (ஃபஜ்ர் தொழுகையின் சுன்னத்தான) இரண்டு சுருக்கமான ரக்அத்களைத் தொழுவார்கள்.