حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ ـ رضى الله عنهما ـ يَوْمَ عَاشُورَاءَ عَامَ حَجَّ عَلَى الْمِنْبَرِ يَقُولُ يَا أَهْلَ الْمَدِينَةِ، أَيْنَ عُلَمَاؤُكُمْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ هَذَا يَوْمُ عَاشُورَاءَ، وَلَمْ يُكْتَبْ عَلَيْكُمْ صِيَامُهُ، وَأَنَا صَائِمٌ، فَمَنْ شَاءَ فَلْيَصُمْ وَمَنْ شَاءَ فَلْيُفْطِرْ .
ஹுமைத் பின் அப்துர் ரஹ்மான் அவர்கள் கூறியதாவது:
முஆவியா பின் அபீ சுஃப்யான் (ரழி) அவர்கள், தாம் ஹஜ் செய்த ஆண்டில் 'ஆஷூரா' நாளன்று மிம்பரில் (நின்றவாறு) பின்வருமாறு கூறினார்கள்: "மதீனாவாசிகளே! உங்கள் மார்க்க அறிஞர்கள் எங்கே? நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'இது 'ஆஷூரா' நாளாகும். இதன் நோன்பு உங்கள் மீது கடமையாக்கப்படவில்லை. ஆனால் நான் நோன்பு நோற்றுள்ளேன். எனவே, விரும்பியவர் நோன்பு நோற்கலாம்; விரும்பியவர் விட்டுவிடலாம்' என்று கூறியதை நான் கேட்டேன்."
ஹுமைத் பின் அப்துர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா பின் அபூ சுஃப்யான் (ரழி) அவர்கள் மதீனாவிற்கு வருகை தந்திருந்தபோது (அங்கு) சொற்பொழிவாளராக (நின்று) ஆஷூரா நாளன்று மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது அவர்கள், "மதீனாவாசிகளே! உங்கள் அறிஞர்கள் எங்கே? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த நாள் பற்றிக் கூறுவதை நான் கேட்டுள்ளேன்: 'இது ஆஷூரா நாளாகும். இந்த நாளில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்கள் மீது கடமையாக்கவில்லை. ஆனால் நான் நோன்பு நோற்றுள்ளேன். ஆகவே, உங்களில் யார் நோன்பு நோற்க விரும்புகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும்! யார் (நோன்பை) விட்டுவிட விரும்புகிறாரோ அவர் விட்டுவிடட்டும்!'" என்று கூறினார்கள்.