ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எந்தப் பெண்ணாயினும், அவளுடைய வலீயின் (பாதுகாவலரின்) அனுமதியின்றித் திருமணம் செய்து கொண்டால், அவளுடைய திருமணம் செல்லாது; அவளுடைய திருமணம் செல்லாது; அவளுடைய திருமணம் செல்லாது. அவன் அவளுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுவிட்டால், அவளது மர்ம உறுப்பை அவன் ஆகுமாக்கிக் கொண்டமைக்காக அவளுக்கு மஹர் உண்டு. அவர்கள் (திருமண விஷயத்தில்) முரண்பட்டால், வலீ இல்லாதவருக்குச் சுல்தானே (ஆட்சியாளரே) வலீ (பாதுகாவலர்) ஆவார்.”