அபூ ஸயீத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்களின் விடுவிக்கப்பட்ட அடிமையான அபூ ராஃபிஉ (ரலி) அவர்கள், ஹஸன் இப்னு அலீ (ரலி) அவர்கள் நின்று தொழுது கொண்டிருந்தபோது அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது ஹஸன் (ரலி) தம் தலைமுடியைப் பின்னி (பிடரியில்) செருகி வைத்திருந்தார்கள். அபூ ராஃபிஉ (ரலி) அதை அவிழ்த்துவிட்டார்கள். ஹஸன் (ரலி) கோபத்துடன் அவர் பக்கம் திரும்பினார்கள். அதற்கு அபூ ராஃபிஉ (ரலி), "உமது தொழுகையில் கவனம் செலுத்துவீராக; கோபப்பட வேண்டாம். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'அது ஷைத்தானின் இருப்பிடம்' என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள். (அதாவது, ஷைத்தானின் இருப்பிடம் என்பது, அவரது பின்னப்பட்ட முடியின் செருகும் இடமாகும்.)